உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு பூஜை

உடுமலை தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு பூஜை

உடுமலை:தேய்பிறை அஷ்டமியையொட்டி, உடுமலை பகுதி கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.தேய்பிறையில் வரும் அஷ்டமியில், சிவன் கோவில் களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நேற்று தேய்பிறை அஷ்டமியை யொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

சக்தி விநாயகர் கோவிலில், காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதே போல், தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், கொழுமம் காசிவிஸ்வநாதர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், குட்டை விநாயகர் கோவில், உட்பட கோவில்களில், காலபைரவர் சன்னதியில், பக்தர்கள், நெய்விளக்கு, குறுமிளகு, பூசணி விளக்கு, தேங்காய் தீபமிட்டு வேண்டுதல் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !