ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கோ பூஜை
ADDED :2136 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை கனகவள்ளி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உலக அமைதி, மக்கள் நலன் வேண்டி கோ பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கனகவள்ளிஆதிகேசவ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சனிக் கிழமை யொட்டி உலக அமைதி, மக்கள் நலன் வேண்டி கோ பூஜை நேற்று காலை 7 மணியளவில் நடந்தது. இந்தக் கோ பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோ மாதாவுக்கு குங்கும அபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை செய்து வழிபட்டனர். மேலும், ஆதிகேசவபெருமாள் சுவாமி ராஜ அலங்காரத்தில் ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.