உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பெருமாள் கோவிலில் 27ம் தேதி பகல் பத்து உற்சவம்

விழுப்புரம் பெருமாள் கோவிலில் 27ம் தேதி பகல் பத்து உற்சவம்

 விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவம், வரும் 27ம் தேதி துவங்குகிறது.விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், வரும் ஜனவரி 6ம் தேதி  அதிகாலை 5:00 மணிக்கு, பரமபதவாசல் திறப்பு உற்சவம் நடைபெறுகிறது. அதனையொட்டி, பகல் பத்து உற்சவம், வரும் 27ம் தேதி துவங்கி, வரும் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறுகிறது.மறுநாள்  6ம் தேதி அதிகாலை பரமபத வாசல் திறப்பு உற்சவமும், 7ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை ராப்பத்து உற்சவமும் நடைபெற உள்ளது.பகல் பத்து உற்சவத்தின்போது, தினமும் காலை 11:00  மணிக்கு சுவாமி புறப்பாடு, தீபாராதனையும், ராபத்து உற்சவத்தின்போது மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்  ஜெயக்குமார், ஆய்வாளர் செல்வராஜ், கோவில் அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !