உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேட்டராய சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு

பேட்டராய சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமையான பேட்டராய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும். அப்போது, பல்லாயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருவர்.  அவர்களுக்கு கழிவறை, குளியலறை அமைத்து கொடுக்க பல ஆண்டுகளாக, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரும், 5, 6ல் நடக்கும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, குளியல் அறை,  கழிவறை மற்றும் முன்னேற் பாடுகள் குறித்து, தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். செயல் அலுவலர் ரகுவரராஜ்குமார், ஆய்வாளர்கள்  சங்கர், கோவிந்தராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !