பூரி ஜெகநாதர் தேரோட்டம்
ADDED :2131 days ago
ஈரோடு: ஈரோடு, சின்ன செங்கோடம்பாளையத்தில் இயங்கி வரும், ஹரே கிருஷ்ணா மையம் சார்பில், ஜெகநாதர் தேரோட்டம் நேற்று நடந்தது. மலர்கள், வண்ண வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பூரி ஜெகநாதர் சுவாமி மற்றும் அகில உலக இஸ்கான் அமைப்பின் ஸ்தாபகர் பிரபு பாதர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், பெண்கள், ஹரிநாம சங்கீத கீர்த்தனைகளை பாடியபடி, விளக்கு ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் வந்தனர். சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை, நரசிம்மர் வேடமிட்டு பங்கேற்றனர். வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோஷமிட்டனர்.