உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி

வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி

வால்பாறை: வால்பாறை, சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 33ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, கடந்த, 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில், நேற்று முன் தினம், நல்லகாத்து ஆற்றிலிருந்து, ஐயப்பபக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், அதனை தொடர்ந்து அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து காலை, 12:00 மணிக்கு, ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !