கிறிஸ்துமஸ் சிந்தனை 9
கடவுளின் அன்பு
நமது அன்பு கள்ளமற்றது என்பதை நல்மனம் கொண்டோராய் எப்படி வெளிப் படுத்துவது சாத்தியமா? சாத்தியமே! பகிர்வு என்கிற பண்பு நமதாகும் போது அது நமக்கு எளிதாகும். கடவுள் தம் அன்பு கள்ளமற்றது என்பதை உணர்த்தவே தனது மகனையே நமக்காக பகிர்ந்து கொடுத்து, நமது ஏழ்மையில் அவரை பங்கெடுக்கச் செய் தார் என்று மகிழ்வுடன் நினைவு கூர்வதே கிறிஸ்து பிறப்பு. தன்னையே இந்த மானுடத்திற்காக பகிர்ந்து கொடுத்த மாபரன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடிட இருப்பதை பகிரவில்லையெனில் இவ்விழா அர்த்த மற்றதாகி விடும். பாலன் இயேசுவை இம்மண்ணில் பிறப்பெடுக்கச் செய்ய தனது வாழ்வை பகிர்ந்து கொடுத்தனர் அன்னை மரியாவும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான யோ சேப்பும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசராக இருக்க வேண்டிய பாலன் இயேசு செல்வ ராயிருந்தும் நமக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
(2: கொரிந்தியர்: 8:9) இந்த மாபெரும் தியாகத்தின் வழியாக அவரது செல்வ செழிப் பை நமக்கு பகிர்ந்து கொடுத்தார். தன்னிடம் உள்ளதையும் ஏன் தன்னையே நமக்காக பகிர்ந்து கொடுத்த பரமன் இயேசுவின் பிறப்பு விழாவில் நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது உடைமையை, நமது நேரத்தை, நமது திறமையை, நமது தோழமையை, நமது பாராட்டை, நமது வழிகாட்டு தலை ஏன் நம்மையே பகிர்ந்திட நாம் தயாராக முடியுமா? நம்மையும், நம்மிடம் இருப் பதையும் பகிர்ந்தால் நமக்கு என்ன கிடைக்கும்?