உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வரம் தரும் சந்தான ஸ்தம்பம்!

குழந்தை வரம் தரும் சந்தான ஸ்தம்பம்!

"காஞ்சியில் உள்ளோர் முனிவர்கள். அதன் கற்களெல்லாம் லிங்கங்கள். நீரெல்லாம் கங்கையே. அங்கு சொற்களெல்லாம் மந்திரங்களே, தொழில்களெல்லாம் இறைப்பணியே. ஆகையால் காஞ்சி, எமன் நுழைவதற்கு உரித்தன்று என்கிறது பழைய பாடல்  ஒன்று.


காஞ்சி காமாட்சி, தேவர்களது பிரார்த்தனைக்கு இணங்க, பண்டாசுரனை அழிக்க பிலத்  துவாரத்தில் இருந்து தோன்றினாள் என்கிறது தல புராணம். அன்னையின் கோயில் உள்ள அஞ்சன காமாட்சி சவுந்தர்ய லட்சுமி ஆகியோரின்  சன்னிதிகள் சிறப்பானவை. பக்தர்கள், அம்பாளின் சன்னிதியில் பெறும் குங்குமத்தை  அஞ்சன காமாட்சியின் சன்னிதியில் சமர்ப்பித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து குங்குமம்  எடுத்து இட்டுக்கொள்வார்கள். தொடர்ந்து, சவுளந்தர்ய லட்சுமியையும் தரிசித்து  வழிபடுவார்கள். அதேபோல், காமாட்சியம்மனின் கருவறை முன் மண்டபத்தின் தென்புறம் வராஹி  அம்மன் எழுந்தருளியிருக்க, அவள் எதிரே சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம்  வந்து வழிபாடு செய்யும் தம்பதிக்கு, வம்ச விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !