வல்லபை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் நெய்க்குட ஊர்வலம்
ரெகுநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகே உள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் இருந்துரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் வரைநெய்குடம் ஏந்தி ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்முத்துக்கிருஷ்ணன் நெய் குடத்தைகரகமாக தன் தலையில் சுமந்தவாறு, 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நடைபயணமாக14 கி.மீ., தொலைவில் உள்ளரெகுநாதபுரத்திற்கு வருகை தந்தனர்.வழியில் பக்தர் கோவிந்தன் பஞ்சு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். பக்தர்கள் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக பாதயாத்திரையாக வந்து நெய்குடத்தினை வல்லபை ஐயப்பனுக்கு வழங்கிடுவோம். வருகிற டிச., 27 அன்று நடக்கும் மண்டலாபிஷேகத்தில் மூலவருக்கு இந்த நெய் மூலம் அபிஷேகம் நடத்தப்படுகிறது, என்றார். ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் சாமி குழுவினர் வரவேற்பளித்தனர். உலகநன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.