உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் பாரப்பாளையத்தில் அன்னதான விழா

திருப்பூர் பாரப்பாளையத்தில் அன்னதான விழா

திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில், அகில பாரத ஐயப்ப  சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு சார்பில், 24ம் ஆண்டு அன்னதான  விழா, 23ல் துவங்கியது. அதிகாலை, கணபதி ஹோமம் நடந்தது. 24ம் தேதி காலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜை, இரவு 7:00 மணிக்கு, ஐயப்பன்  மகா கன்னிசாமி பூஜை, கலசபூஜை, தீபாராதனை, பஜனை நடைபெறும். நாளை  மறுநாள் 25ம் தேதி, காலை 9:00 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது.  காலை 10:00 மணிக்கு அன்னதான பூஜை நடக்கிறது. காலை 11:00 மணி முதல்  அன்னதானம் நடைபெறும். இதை யொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கப்படுகி்ன்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !