உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் தரிசனம் 24 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம் 24 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க பக்­தர்­கள் 24 மணிநேரம் காத்திருக்கின்றனர். பள்ளி கல்லுாரி விடுமுறையை தொடர்ந்து திருமலைக்கு வரும் பக்­தர்­களின் எண்ணிகை உயர்ந்து வருகிறது.


அதனால் ஏழுமலையான் தரிசனத்திற்காக பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை வைகுண்டத்தில் உள்ள 24 காத்திருப்பு அறைகளில் காத்திருந்த பக்­தர்­கள் 24 மணி நேரத்திற்கு பின் தரிசனம் செய்­தனர்.விரை வு தரிசனம் நேர ஒதுக்கீடு தரிசனம் திவ்ய தரிசனம் உள்ளிட்ட  தரிசன டோக்­கன் பெ ற்ற பக்­தர்கள்3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்­தனர். இந்நிலை வரும் ஆங்கில புத்தாண்டு வரை நீடிக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர். பக்­தர்களின் வருகையை முன்னிட்டு லட்டு பிரசாதம் தேவையான அளவு நிலுவையில் வை க்­கப்பட்டுள்ளது. திருமலையில் தற்போது கடுங்குளிர் நிலவுவதால் பக்­தர்­கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !