புத்திமான் பலவான்
ADDED :2155 days ago
புத்திமான் பலவான் என்பதற்கேற்ப புத்திக்கூர்மையும், உடல்பலம் கொண்டவர் அனுமன். மனைவியைப் பிரிந்த ராமர் மனம் மகிழும் விதமாக கண்டேன் சீதையை என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர். கடலை தாண்டுவது, மலையை பெயர்ப்பது, காட்டை துவம்சம் செய்வது என அவரது வீரத்தை பட்டியலிட முடியாது. வாலில் நெருப்பு வைத்தபோது இலங்கையை தீக்கிரையாக்கினார். இவரை ஆஞ்சநேயர், வாயுபுத்திரன், மாருதி என்றும் அழைப்பர்.