உறவைப்பகிர்வோம்
ADDED :2152 days ago
பெத்தலை ஊரின் பெருமை தான் என்ன!மாபரன் இயேசு பிறந்ததால் தானேகொடுமன மாந்தர் மனநிலை மாறஉதித்ததன் மூலம் புதுயுகம் மலர்ந்ததுஅநீதி நியதி கோலோச்சும் நிலையை வேரோடு சாய்க்க அன்றே சொன்னார். ஏழ்மை எதுவெனத் தெரியாத நிலையில்சுகபோக தனம் அதை பெரிதாய் மதித்துவாழும் மனிதர் மனநிலை மாறமண்ணில் உதித்தார் உண்மை உரைத்தார்அன்பு, கனிவு, பணிவு, துணிவுஅதில் தான் நிறைவு உண்டெனக் காட்டினார்
தானெனும் தன்னலம் நம்மில் மறைய தந்தார் புவிக்கு அருள்மொழிக் கருத்துஎங்கும் அமைதி அதுவே நியதிஎளியோர் இன்னல் அறவே அகலதாழ்ச்சி அதுவே உயர்வின் உயர்வழிவாழ்ந்து சொன்னார் வழிமுறை நமக்கு அன்பர் இயேசு அவனியில் உதித்தஇந்த நாளில் உறவைப் பகிர்வோம்நல்லதே நினைப்போம் நன்னெறி காப்போம்பிறர்க்கு உதவும் பண்பை வளர்ப்போம்மாமரி மைந்தன் அன்பின் பேராளிபிறப்புச் செய்தி இது தான் அறிவோம்.