ஏழரைச்சனியின் தாக்கம் குறைய என்ன செய்யலாம்?
ADDED :2150 days ago
நள மகாராஜாவுக்கு சனிதோஷம் போக்கிய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசிப்பது நல்லது. உங்கள் ஊரிலுள்ள சிவன் கோயிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபட ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். சாதாரண அபிஷேகமும் செய்யலாம். சனிக்கிழமையில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபட்டாலும் நன்மையே.