உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் அனுமன் ஜெயந்தி விழா

உடுமலையில் அனுமன் ஜெயந்தி விழா

உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று 25ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், சவுரிராஜ பெருமாள் சன்னதி வளாகத்திலுள்ள அனுமனுக்கு அதிகாலை, 5:00 மணி முதல் காலை, 9:00 மணிக்குள் சிறப்பு யாகம், நிறைவேள்வி, மகா அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம், வடைமாலை சாத்துதல், மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !