சபரிமலைக்கு 30 டன் காய்கறி; புளியம்பட்டியில் இருந்து பார்சல்
ADDED :2189 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் இருந்து, சபரிமலை சன்னிதானத்துக்கு, 30 டன் காய்கறி, ஆறாவது ஆண்டாக அனுப்பி வைக்கப்பட்டது.
புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக் குழு ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஆண்டுதோறும் சபரிமலை சன்னிதானத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, காய்கறி வழங்கி வருகின் றனர். ஆறாவது ஆண்டாக நடப்பாண்டு, தக்காளி, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைகிழங்கு, பூசணி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய், தேங்காய் உள்பட, 30 டன் காய்கறி வகைகள், இரண்டு லாரிகளில், சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய் என்று, பந்தளராஜா யாத்திரைக்குழு தலைவர் வரதராஜ் கூறினார். குழுவில் உள்ள ஐயப்ப பக்தர்கள், சபரிமலை அன்னதான சேவை பணியிலும் ஈடுபட்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.