பொன்னாக்குடி சிவன் கோயிலில் கால பைரவர் ஜெயந்தி!
ADDED :5069 days ago
திருநெல்வேலி: கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பொன்னாக்குடி சிவன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் பொன்னாக்குடி உண்ணாமலை அம்பாள் சமேத அருணாசல ஈஸ்வரர் கோயிலில் கால பைரவர் ஜெயந்தி முன்னிட்டு அங்குள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் அனைத்து ராசிகாரர்களும் பைரவர் சன்னதி முன் மிளகு தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவில் கோயில் தக்கார் அழகு லிங்கேஸ்வரி, அருணாசல ஈஸ்வரர் பக்தர் வழிபாட்டு குழு மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.