உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்புடாதியம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்!

முப்புடாதியம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்!

திருநெல்வேலி: செங்கோட்டை முப்புடாதியம்மன் கோயிலில் இன்று (25ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. செங்கோட்டை தஞ்சாவூர் தெரு விஸ்வகுல சிற்ப சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளி, உச்சிமாகாளி, முப்புடாதியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி கோயிலில் 24ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்குகியது. காலையில் விக்னேஷ்வரர் பூஜை, புண்ணியாக வாசம், பஞ்ச கவ்யம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ருத்சங்கரகரணம், அங்குரார்ப்பணம், ரக்ஷõபந்தனம், கலாஹர்ஷனம், முதல்கால யாகசாலை பூஜை, இரவு மந்தரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. 25ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி மூர்த்தி, ரக்ஷõபந்தனம், நாடி சந்தனம், ஸபர்சாகுதி, பூர்ணாகுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நடக்கிறது. 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமான கோபுரம், மூலஸ்தாபனம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக பூஜை வழிபாடுகளை மேலக்கடையநல்லூர் முத்துக்குமார் பட்டர், தென்காசி செந்தில் பட்டர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை விஸ்வகுல சிற்ப சமுதாய பிரமுகர்கள், இளைஞரணியினர் நாட்டாண்மை சக்திவேல் தலைமையில் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !