கீதை காட்டும் பாதை
ADDED :2150 days ago
பவந: பவதா மஸ்மி
ராம: ஸஸ்த்ர ப்ருதாமஹம்!
ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி
ஸ்ரோதஸாமஸ்மி ஜாந்ஹவீ!!
ஸர்காணாமாதி ரந்தஸ்ச
மத்யம் சைவாஹ மர்ஜுந:!
அத்யாத்ம வித்யா வித்யாநாம்
வாத: ப்ரவததா மஹம்!!
பொருள்: தூய்மைப்படுத்தும் பொருள் களில் காற்றாக இருப்பவன் நானே! ஆயுதம் தாங்கியவர்களில் ஸ்ரீராமனாக இருக்கிறேன். நீர்வாழ் உயிர்களில் முதலையாகவும், நதிகளில் கங்கையாகவும் இருப்பதும் நானே! அர்ஜுனா! படைப்புகளின் ஆரம்பம், நடு, முடிவுமாக இருப்பவன் நானே! கடவுளைப் பற்றி அறியும் பிரம்ம வித்தையாகவும், தர்க்கம் செய்பவர்களில் முடிவு இது என தீர்மானிக்கும் வாதமாக இருப்பவனும் நானே!