உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடியில் தேய்பிறை பிரதோஷம்

கன்னிவாடியில் தேய்பிறை பிரதோஷம்

கன்னிவாடி: தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் பூஜைகள் நடந்தது.

மூலவர், நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டு, திருவாசக பாராயணத்துடன் பூஜைகள் நடந்தது. சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !