உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் முத்தங்கி சேவை

திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் முத்தங்கி சேவை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், 80 வது ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு முத்தங்கி சேவையில், அர்ச்சனை, மகாதீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !