உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேல் ஏந்துவதற்கு என்ன தகுதி இருக்கிறது; திருமாவளவனுக்கு கண்டனம்

குன்றத்தில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேல் ஏந்துவதற்கு என்ன தகுதி இருக்கிறது; திருமாவளவனுக்கு கண்டனம்

மதுரை: ‘‘திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேல் ஏந்துவதற்கு திருமாவளவனுக்கு என்ன தகுதி இருக்கிறது’’ என ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியதாவது: மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது, ‘எந்த பிராமணர்களாவது முருகன் என்று பெயர் வைத்துள்ளார்களா’ என பிராமணர்களை வம்புக்கு இழுத்தது கண்டிக்கத்தக்கது. ‘பிராமணர்கள் யாராவது ஒருத்தர் முருகன் என்று பெயர் வைத்திருந்தால் என்னிடம் காட்டுங்கள். நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்’ என்று கூறும் திருமாவளவனிடம் முருகன், கந்தன், குமரன் என ஏராளமான தமிழ் பெயர்கள் கொண்ட பிராமணர்களை நேரில் அழைத்து வந்து காண்பிக்க தயார். முருகப்பெருமானை ஸ்ரீகந்தர், சுப்பிரமணியர், சுகுமாரர் என்றும் சனாதனவாதிகளான நாங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்வோம்.


இதில் சனாதனத்தை எதிர்ப்போம் என்று ஹிந்து மதத்தையும், பிராமண சமூகத்தையும் எதிர்க்கும் திருமாவளவனுக்கு என்ன பிரச்னை. தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேல் ஏந்துவதற்கு என்ன தகுதி இருக்கிறது. சனாதனத்தை எதிர்ப்போம் என்று கூறிவிட்டு மேடையில் முருகனின் வேலை கையில் ஏந்துவது முருகனின் புனிதமான வேலை அவமதிப்பதற்கு சமம். கையில் வேல் ஏந்துவது எல்லாம் தேர்தல் நாடகம் என ஹிந்துக்களுக்கு தெரியும். யாரை ஏமாற்ற இந்த வேடம். ஈ.வெ.ரா., வழியில் வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திருமாவளவன், தன் தந்தை ராமசாமி பெயரை தொல்காப்பியன் என்று பெயர் மாற்றியதற்கு காரணம் என்ன. ராமசாமி என்ற பெயர் அருவருக்கதக்க பெயரா. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !