திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மோட்ச தீபம்
ADDED :2191 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மோட்ச தீபம் ஏற்றி நடை சாத்தப்பட்டது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 7:50 மணிக்கு நடை சாற்றப்பட்டது. அதற்கு முன்னதாக மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின் சூரியகிரகணம் முடிந்ததும், கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. நான்கு மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜை செய்யப்படும். அதன் பின் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவர்.