திருவள்ளூர் அனுமன் ஜெயந்தி விமரிசை
ADDED :2142 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 32 அடி உயர மூலவர் ஆஞ்ச நேயருக்கு, நேற்று 25ம் தேதி காலை விசேஷ திருமஞ்சனம் நடந்தது.வெற்றிலை, துளசி மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. காக்களூரில் உள்ள, வீர ஆஞ்ச நேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
பின், மூலவருக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது.108 பால்குட ஊர்வலம்திருத்தணி: திருத்தணி, மேட்டு தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், நேற்று 25ம் தேதி, அனுமன் ஜெயந்தியையொட்டி, 108 பால்குட ஊர்வலம், காலை, 9:00 மணிக்கு நடந்தது.அதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.