ஊத்துக்காடு அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :2143 days ago
ஊத்துக்காடு:தனுர் மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம், அம்மன் கோவில்களில், நேற்று, வெகு விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு எல்லம்மன் கோவிலில், தனுர் மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று 25ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இரவு, மலர் அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் எழுந்தருளினார். அதேபோல், கோவிந்தவாடி அங்காளபரமேஸ்வரி கோவிலில், அமாவாசை தினத்தை ஒட்டி, இரவு, 7:30 மணிக்கு மலர் அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் எழுந்தருளினார். கோவிந்தவாடி சுற்று வட்டாரச் சேர்ந்த மக்கள் பங்கேற்று, அம்மனை வணங்கி சென்றனர்.