உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் ஐயப்பன் கோவிலில் படி பூஜை

அன்னுார் ஐயப்பன் கோவிலில் படி பூஜை

அன்னுார்: புளியம்பட்டி, ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறக்கப்பட்டது. திரளான  பக்தர்கள் படியேறி சுவாமி தரிசனம் செய்தனர்.அன்னுார் அடுத்து புளியம்பட்டி,  நேருநகரில், தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது.

இங்கு சபரிமலையில் உள்ளது போல், 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதம், 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.அதன்படி, நேற்று முன்தினம் 24ம் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு அபிஷேக  ஆராதனை நடந்தது.

அதனை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன.காலை, 6:00 மணிக்கு குருசாமி முன்னிலையில், 18ம் படி  திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள், 18ம் படி ஏறி, ஐயப்பனை தரிசித்தனர். பின்னர்  அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 18ம் படிக்கு,  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, படி பூஜை நடந்தது. இதையடுத்து, 18ம்  படி நடை அடைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !