உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவிலில்  நேற்று 25ம் தேதி மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம்  நடந்தது.

பூஜையை முன்னிட்டு நேற்று 25ம் தேதி மதியம் 1:30 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகவேள்விகள் துவங்கியது. மதியம் 2:30 மணிக்கு மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.

தொடர்ந்து யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக  வந்து பிரத்தியங்கராதே விக்கு கலச அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 3:00  மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை  நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !