படப்பை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில்
ADDED :2193 days ago
படப்பை:குன்றத்துார் தாலுகா, படப்பையில், துாய சகாய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் விழாவின் திருப்பலி, நேற்று 25ம் தேதி காலை நடந்தது.
இதில், பலர் பங்கேற்றனர்.கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை சித்தரிக்கும் வகையில் பிரம்மாண்ட குடில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை, கிறிஸ் தவர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.