உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்கோடு ஆதியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பாலக்கோடு ஆதியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பாலக்கோடு: மார்கழி அமாவாசையையொட்டி, ஆதி அம்மனுக்கு இருமுடிய கட்டி  வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியில், 500 ஆண்டுகள் பழமையான  ஆதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாத  அமாவாசையன்று, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என, அனைவரும்  விரதமிருந்து, கிட்டம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து, இருமுடி  கட்டிக்கொண்டு, 2 கி.மீ., தூரம் நடந்து சென்று, கிட்டம்பட்டி மலையில்  அமைந்துள்ள ஆதி அம்மனுக்கு, தங்களுடைய நேர்த்திகடனை செலுத்துவது  வழக்கம். அதன்படி, இந்தாண்டு மார்கழி அமாவாசையையொட்டி, பாலக்கோடு,  பென்னாகரம், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து, 500க்கும்  மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, கிட்டம்பட்டி பெருமாள் கோவிலில் இருமுடி  கட்டி, ஆதிஅம்மனை வழிபட்டனர். விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆதி அம்மன்  கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !