உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

சாரம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுச்சேரி: சாரம் முத்துரங்கசெட்டி நகரில் உள்ள ஸ்ரீராமசாந்தமூர்த்தி ஆஞ்சநேயர்  கோவிலில் எட்டாம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று 25ம் தேதி  நடந்தது.

விழாவையொட்டி நேற்று 25ம் தேதி காலை 7.00 மணிக்கு ேஹாமம், 9.00  மணிக்கு பூர்ணா ஹூதி, பகல் 11.30 மணிக்கு தீர்த்த பிரசாதங்கள், அன்னதானம்  வழங்கப்பட்டது.மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, புவனா  (எ) புவனேஸ்வரன் உள்பட ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமசாந்தமூர்த்தி ஆஞ்சநேயர் கோவில்  திருப்பணி தலைவர் சுந்தரமூர்த்தி, பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !