உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் மார்கழி மாத சிறப்பு பூஜை

பெண்ணாடம் மார்கழி மாத சிறப்பு பூஜை

பெண்ணாடம்: பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாத  சிறப்பு பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று 25ம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமாதேவி சமேத வேதநாராயண பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

காலை 6:15 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வேதநாராயண பெருமாள் சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரதராஜ பெருமாள் சுவாமிக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !