உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பம் அனுமன் ஜெயந்தி விழா

மந்தாரக்குப்பம் அனுமன் ஜெயந்தி விழா

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் எஸ்.பி.டி.எஸ்., நகரில் உள்ள ஆஞ்சநேய சுவாமி  கோவிலில் 9ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா  கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, நேற்று 25ம் தேதி காலை 9.00 மணி முதல் 12.00  மணி வரை சுவாமிக்கு பாலாபிஷேகம், 1,008 வடை மாலை சாற்றி, மகா  தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனத்தில் ராமர் சுவாமி  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமானோர் தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !