உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சேலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம் 24ம் தேதி நள்ளிரவு, சேலம், குழந்தை இயேசு பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தொடர்ந்து, ’கேக்’ வெட்டி ஒருவருக்கொருவர் வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நேற்று 25ம் தேதி காலை, ஆலய பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் திருப்பலி நடந்தது.  
அதேபோல், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், அழகாபுரம் மிக்கேல்  அதிதூதர், சூரமங்கலம் இருதய ஆண்டவர், செவ்வாய்ப்பேட்டை ஜெயராகினி,  கலெக்டர் அலுவலகம் அருகேவுள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர், அஸ்தம்பட்டி  இம்மானுவேல் தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.  அதில், ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து, கேக் வழங்கி, கிறிஸ்துமஸ்  பண்டிகையை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !