உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியங்காவு தர்ம சாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாணம்

ஆரியங்காவு தர்ம சாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாணம்

ஆரியங்காவு : கேரள மாநிலம் ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயில் திருக்கல்யாண விழா நேற்றிரவு கோலாகலமாகநடந்தது. மணக்கோலம்காட்டி திருமணவரம் அளிக்கும் சுவாமி, அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை தர்ம சாஸ்தா மணந்ததாகஐதீகம். சவுராஷ்டிரா மக்களை சம்பந்திமுறையாக கருதி திருக்கல்யாண அழைப்பிதழ் அனுப்பி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டு கவுரவிப்பது வழக்கம். இதனால் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இருதரப்பும் இணைந்து ஆண்டு தோறும் திருக்கல்யாணத்தை பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.சுவாமியும் அம்பாளும்இந்த ஆண்டு திருக்கல்யாண விழா டிச.,24ல் துவங்கியது. கேரள மாநிலம் மாம்பழத்துறையில் பகவதி என அழைக்கப்படும் ஆரியங்காவு புஷ்கலாதேவி கோயிலில் புஷ்கலாதேவியை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து டி.கே. சுப்பிரமணியன் தலைமையில் ஆரியங்காவு அழைத்து வந்தனர். ஆரியங்காவு மேல்சாந்தி அனிஷ்குமார் ஜோதியை அய்யனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் திருக்காட்சி செய்விக்கப்பட்டது.திருக்கல்யாண விழாதிருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தாலப்பொலி எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் நடந்தது.திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து, அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம்நடந்தது.

மாலை 4:00மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் அலங்கார சப்பரங்களில் கோயிலை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி அம்பாளுக்கு சமூக மக்கள் சோமஞ்ஜோடி வழங்கினர்.சுவாமி சார்பில் ஆரியங்காவு கோயில் செயல் அலுவலர் பினு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உதவி கமிஷனர் ராஜேந்திரன், அட்வைசரிகமிட்டி தலைவர் சுரஷே், செயலாளர் சரசன், அம்பாள் சார்பில் சங்க தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுக்காரியதரசி எஸ்.ஜெ.ராஜன், நிச்சயதார்த்த உற்வசதாரர் ஹரிஹகரன், நிர்வாகி கண்ணன் இருந்தனர். மங்கல குலவை முழங்க இரவு 10:30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது.சரவணன் எம்.எல்.ஏ., கோவை ஈசா பொறியியல்கல்லுாரி உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி, சேலம் கணேசன், காஞ்சிபுரம் சீனிவாசன். விஜிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து காலை 6:00 மணிக்கு உஷக்கால பூஜை, பகவத் பாராயணம், பகல் 2:00 மணிக்கு சர்வராஜ அலங்காரம், தீபாராதனையுடன் மண்டலபூஜை நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !