ராமேஸ்வரம் கோயிலில் ரூ.81.68 லட்சம் காணிக்கை
ADDED :2115 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் நவ.,28க்கு பிறகு நேற்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் ஊழியர்கள் திறந்தனர்.
பின் உண்டியல் காணிக்கையை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணி, கக்காரின், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர். இதில் ரொக்க பணம் 81 லட்சத்து 68 ஆயிரத்து 89 ரூபாயும், தங்கம் 55 கிராம், வெள்ளி 1 கிலோ 698 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இக்காணிக்கையை இணை ஆணையர் உத்தரவுபடி அரசு வங்கியில் டெபாசிட் செய்தனர்.