உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் சூரிய கிரகணத்தில் பரிகார பூஜைகள்

உத்தரகோசமங்கையில் சூரிய கிரகணத்தில் பரிகார பூஜைகள்

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்றது.


சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று காலை 6:30 முதல் 11:30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் மறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் பரிகார பூஜைகள் நிறைவேற்றப்பட்டது. 11:45 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலிலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகள், புனித நீர் தெளிக்கப்பட்ட பின் மீண்டும் முற்பகல் நடை திறக்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !