உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 22,780 கி.மீ., ஆன்மிக சுற்றுலா நிறைவு செய்த சகோதரர்கள்

22,780 கி.மீ., ஆன்மிக சுற்றுலா நிறைவு செய்த சகோதரர்கள்

காரைக்குடி :காரைக்குடி அருகே, சகோதரர்கள் இருவர், 49 நாட்களில், 22 ஆயிரத்து, 780 கி.மீ., ஆன்மிக சுற்றுலா சென்று, நேற்று சொந்த ஊர் திரும்பினர்.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள, கே.வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டித்துரை, 30, கார்த்திகேயன், 25.இருவரும், ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கின்னஸ், லிம்கா சாதனைக்காகவும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ஆன்மிக சுற்றுலா பயணத்தை, நவ.,7ல் துவக்கினர். இவர்கள், 49 நாட்களில், 22 ஆயிரத்து, 780 கி.மீ., பயணம் செய்து, 20 மாநிலங்களில், 501 கோவில்களில் தரிசனம் செய்து, கே.வேலங்குடிக்கு நேற்று திரும்பினர். இது குறித்து, சகோதரர்கள் கூறுகையில், ஆன்மிக சுற்றுலா பயணத்தில் ஜோதிர்லிங்கம், 108 திவ்யதேசம், ஆறுபடை வீடு மற்றும் பழமையான கோவில்களுக்கு சென்று வந்தோம். தெலுங்கான கவர்னர் தமிழிசை, எங்களுக்கு சிறந்த வரவேற்பளித்தார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !