உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்ரகாளியம்மன் திருவிழா: குண்டம் இறங்கிய பக்தர்கள்

வீரபத்ரகாளியம்மன் திருவிழா: குண்டம் இறங்கிய பக்தர்கள்

திருப்பூர் : வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருப்பூர் பி.என்., ரோடு, ராமையா காலனியில், கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

கோவில் குண்டம் திருவிழா, கணபதி ேஹாமத்துடன், கடந்த, 16ல், துவங்கியது. தினமும், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது. கடந்த, 24ம் தேதி, அம்மன் அழைத்தல், திருவிளக்கு வழிபாடு, அம்மனுக்கு மஞ்சள் பொங்கல், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், மாலை, குண்டம் திறக்கப்பட்டு, பூ வளர்க்கப்பட்டது. இரவு, முரசன் சுவாமி மற்றும், வீரபத்ரகாளியம்மன், சிங்க வாகனத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 6:00 மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. காப்பு கட்டியிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, சுவாமி திருவீதியுலாவும், அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டும் பூஜை, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !