உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று

பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு மலர்கிறது.  அதோடு குருபகவான், சனிபகவானின் பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளன.  எனவே ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்றடிக்கும். உற்சாகமாக  செயல்படுவீர்கள். முயற்சியில் தடைகள் வந்தாலும் எளிதில் முறியடிப்பீர்கள்.  மனஉளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் குருவால்  நினைத்ததை வெற்றிகரமாக செய்து  முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.   தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் மார்ச் 27க்குள் நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம்  கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்திலுள்ள பெரியோரின் ஆதரவு, ஆலோசனையும்  கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல்  இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரும். ஆடம்பர  பொருள் வாங்கலாம்.  சுப விஷயம் குறித்த பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும்.  சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.  விருந்து, விழா என அடிக்கடி செல்வர்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி  தேடி வரும். மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை சிலர் மன உளைச்சலுக்கு  ஆளாகலாம். ஆக.31க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற  உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ராகுவால் காரிய அனுகூலம், பொருளாதார வளம், நல்ல  முன்னேற்றம் ஏற்படும்.
* வியாபாரத்தில் கூட்டாளி களிடையே ஒற்றுமை பலப்படும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பர்.  
* தனியார் துறையில் பணி புரிபவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
* ஐ.டி., துறையினருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.  
* மருத்துவர்களுக்கு  வேலையில் திருப்தி நீடிக்கும்.
* வக்கீல்கள் துணிச்சலுடன் செயல் படுவர். வருமானம் உயரும்.
* ஆசிரியர்கள் வேலைப்பளு குறையும்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகளுக்கு திறமை பளிச்சிடும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயரும்.
* விவசாயிகள் நிம்மதியுடன் பணிபுரிவர்.
* பள்ளி மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். கல்வி  உதவித்தொகை கிடைக்கப் பெறுவர்.
* கல்லூரி மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பை  பெறுவர். சிலர் வெளிநாடு சென்று படிப்பர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ஆக.31க்கு பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படலாம்.
* வியாபாரிகள் ஆக.31க்கு பிறகு  தொழில் ரீதியாக அலைச்சலுக்கு  ஆளாகலாம்.
* அரசு பணியாளர்களுக்கு ஆக.31க்கு பிறகு  வேலைப்பளு அதிகரிக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு திடீர்  இடமாற்றத்திற்கு ஆளாவர்.
* ஐ.டி.,துறையினர் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வீண் விவாதங்களில்  ஈடுபட வேண்டாம்.
* ஆசிரியர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை செலவு அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்கு பிறகு எதிரி தொல்லை, மறைமுகப் போட்டி  அதிகம் இருக்கும்.
* மாணவர்கள் மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை அக்கறையுடன் படிப்பது  நல்லது.

பரிகாரம்:
●  செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை
●  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !