ஆணவம் ஆபத்து!
ADDED :4952 days ago
ஆணவம் மிகவும் ஆபத்தானது. எவ்வளவு ஆற்றல் உடையவராக இருந்தாலும், ஆணவம் மட்டும் தலை தூக்கினால் அது அவரை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடும். நாணல் புயலுக்குகூட தப்பிப் பிழைக்கிறது. ஆனால் உயர்ந்த பனைமரம் இடியால் தாக்கப்பட்டு அழிந்து போகிறது. அதுபோல் பணிவுடன் வாழ்பவர்கள் என்றென்றும் உயர்வு பெற்று வாழ்வார்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு வீழ்ச்சியும் அழிவும் ஏற்படும். மனம் போனபடி வாழும் ஆணவம் கற்றவை, பெற்றவை அனைத்தையும் அழித்து விடும். ஆணவத்தை என்றுமே தலைதூக்க விட்டு விடாதீர்கள்.