ராணுவ தளபதி வி.கே.சிங் காசியில் தரிசனம்!
ADDED :4919 days ago
வாரணாசி: ராணுவத் தளபதி வி.கே.சிங்., காசி விசுவநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலில், ராணுவத் தளபதி வி.கே.சிங் நேற்று சாமி தரிசனம் செய்தார். தன் மனைவி, மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் கோவிலுக்கு வந்த சிங், அங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். முன்னதாக, சாரநாத்தில் உள்ள புத்த மடாலயத்துக்கும் அவர் சென்றார். கங்கை நதியில் படகு சவாரியும் செய்தார். இதன்பின், சிறப்பு விமானத்தில் அவர் டில்லி திரும்பினார்.