திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
ADDED :4919 days ago
கடலூர் : கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மகா சம்ப்ரோஷண விழா, இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.கடலூர், திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி, கடந்த 1997ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி மகா சம்ப்ரோஷணம் நடந்தது. ஆகம விதிப்படி சம்ப்ரோஷணம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால், கோவிலை புதுப்பித்து சம்ப்ரோஷணம் நடத்தும் பொருட்டு, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பாலாலயம் செய்து திருப்பணிகள் துவங்கப்பட்டன. ஐந்து கோடி ரூபாய் செலவில் கோவிலை புதுப்பித்ததை தொடர்ந்து, இன்று காலை மகா சம்ப்ரோஷணம் நடைபெற உள்ளது.