உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூவுலகரசியம்மன் கோவில்: சித்திரை திருவிழா துவக்கம்!

மூவுலகரசியம்மன் கோவில்: சித்திரை திருவிழா துவக்கம்!

ஊட்டி: ஊட்டி காந்தல் மூவுலகரசியம்மன் கோவி­லில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது. ஊட்டி காந்தல் மூவுலகரசியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா மங்கள சண்டி ஹோமத்துடன் துவங்கியது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற கரக ஊர்வலம் மூவுலகரசியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மே 5ம் தேதி வரை பல்வேறு உபயதாரர்கள் சார்பில் மதியம் அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தேர் ஊர்வலம் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 8.00 மணிக்கு மகா சிறப்பு அபிஷேக குழுவினரால் பால்குட அபிஷேகம், 6.30 மணிக்கு முக்கிய தேர் திருவிழா நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 8ம் தேதி இரவு 10 மணிக்கு மதுரை வீரன் பூஜை, 9ம் தேதி கரக உற்சவம், 10ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி பகல் 12.00 மணிக்கு மறுபூஜை, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !