உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி அய்யப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேகம்

கள்ளக்குறிச்சி அய்யப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு  மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடந்தது.

கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜையையொட்டி அதிகாலையில் கணபதி யாகம் செய்து, விநாயக பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் கோமுகி நதிக்கரைக்கு சென்று நீராடி, பின் கும்ப கலசத்தை பிருந்தாவன மேடையில் வைத்து ஐயப்ப சுவாமியை  ஆவாகனம் செய்து மூல மந்திரங்களை வாசித்து பூஜை நடத்தினர்.

பிறகு கும்ப கலசத்தை ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்குச் சென்றனர்.மூலவர், உற்சவர், ஐயப்பன் சுவாமிகளுக்கு மஞ்சள் பொடி, திருமஞ்சனதுாள், பஞ்சாமிர்தம், பழச்சாறு, சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரம் செய்து புஷ்பாஞ்சலி பூஜை நடத்தி  வைக்கப்பட்டது.கார்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரி யார்கள்  பூஜைகளை செய்தனர். ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பினர். இது  போன்று கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் அய்யப்ப  சுவாமிக்கு மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நேற்று 27ல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !