உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு கிரக சேர்க்கை: திருநள்ளார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆறு கிரக சேர்க்கை: திருநள்ளார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் ஆறு கிரகணங்கள் ஒன்று சேர்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் ஆறு கிரகங்களில் ஒன்று சேர்க்கை முடிவடைவதை முன்னிட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். காரைக்கால்  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் ஆறு கிரகணங்களின் ஒன்று சேர்வதால் பல்வேறு நன்மைகள் பெறுகின்றது. பொதுவாக கிரகங்களில் வாழ்வியல் குறித்து ஆராய்வது வழக்கம். கிரகங்களான சனி.குரு ஆகியவை சஞ்சாரத்தை கணக்கில்  கொண்டு பல்வேறு நன்மைகள் தீமைகள் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது.இதில் சூரியன்.சந்திரன். புதன்.குரு.சனி.கேது உள்ளிட்ட ஆறு கிரகங்களில் ஒன்று சேர்க்கையால் தனிச்சிறப்பு  வாய்ந்தது.இதனால் பெறும் நன்மையாக திகழ்வதால் நேற்று சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடி விட்டு பின் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவானை சிறப்பு தரிசனம்  மேற்கொண்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.மேலும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !