உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்தளேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா

மத்தளேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா

செஞ்சி: மேலச்சேரி மத்தளேஸ்வரர் குடவரைக் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.

செஞ்சி தாலுகா மேலச்சேரி கிராமத்தில் உள கி.பி., 7 ம் நூற்றாண்டை சேர்ந்த பிரகன்நாயகி சமேத மத்தேளஸ்வரர் குடைவரைக் கோயிலை புதுப்பித்து கடந்த நவ.10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.  இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு மத்தளேஸ்வரர், பிரகன் நாயகிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10 மணிக்கு கவச பிரதிஷ்டை செய்து, சிறப்பு ஹோமம் நடந்தது. 12 மணிக்கு மகா பூர்ணாஹூதி  நடந்தது. தொடர்ந்து கலச நீர் கொண்டு மூலவர் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திருப்பணிக்குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !