உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் பகல் பத்து துவங்கியது

திருக்கோஷ்டியூரில் பகல் பத்து துவங்கியது

 திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்ஸவம் துவங்கியது.

இக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் உற்ஸவ துவக்கத்தை முன்னிட்டு டிச.,27 6:30 மணிக்கு ஆண்டாள் சன்னதிக்கு பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்து ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. பின்னர் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் காப்புக்  கட்டி பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி ஆழ்வாருக்கு மங்களாசனம் நடைபெறும். ஜன.,5ல் திருமங்கையாழ்வாருக்கு திருவடித் தொழுதல் நடைபெறும். ஜன.6ல் பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள்  வாசலை கடந்து செல்வார். தொடர்ந்து பத்து நாட்களுக்கு ராப்பத்து உற்ஸவம் நடைபெறும். தினசரி மாலை பெருமாள் பரமபதவாசல் திறக்கப்பட்டு எழுந்தருள்வார். ராப்பத்து பத்தாம் நாளில் நம்மாழ்வார் திருவடி தொழுதலுடன் உற்ஸவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !