உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் படிதிருவிழா மற்றும் பஜனை

திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் படிதிருவிழா மற்றும் பஜனை

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், நாளை 31ம் தேதி, படித் திருவிழாவும், இரவு முழுவதும், பஜனையும் நடைபெறுகிறது.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய் நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி படித் திருவிழாவும், ஜன., 1ம் தேதி, புத்தாண்டு சிறப்பு தரிசனமும், வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், நாளை 31ம் தேதி, படித் திருவிழாவையொட்டி, மூலவருக்கு காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, தொடர்ந்து பாலாபிஷேகம் நடக்கிறது.அதை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 6:00 மணி முதல், மறு நாள், காலை, 6:00 மணி வரை, இரவு முழுவதும், பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் மற்றும் சாய்ராம் நாம கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !