அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் செம்பொற்ஜோதிநாதர்
ADDED :2116 days ago
கள்ளக்குறிச்சி: செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜையையொட்டி, மூலவர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி 31 நாட்களும், மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. தினமும் காலை 5 - 6 மணியளவில் கோ பூஜைகள் நடத்தப்படுகிறது.தொடர்ந்து மார்கழி மாத 14ம் நாளான நேற்று அர்த்த நாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் நேரடியாக மலர்களை துாவி வழிபாடு நடத்தினர். நாளை 1ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி சிவன் தலையில் இருந்து கங்கை தீர்த்தம் வருவது போன்ற அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பார் என திருநாவுக்கரசர் உழவார பணி திருக்கூட்ட சிவனடியார் நாச்சியப்பன் தெரிவித்தார்.