சிவகங்கை உலக நன்மைக்காக ஸ்ரீஹயக்ரீவர் யாகம்
ADDED :2123 days ago
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக 4வது ஆண்டாக ஸ்ரீஹயக்ரீவர் யாகம் நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டம் மற்றும் நாட்டரசன்கோட்டை கிளை சார்பில் நடந்த இந்த யாகத்தை எஸ்.நாராயணன் தலைமையில் சிவகுமார், மகாதேவன் கண்ணன் நடத்தி வைத்தனர்.
இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பூஜையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பிரசாதமாக ஹயக்ரீவர் படம் மற்றும் பேனா வழங்கப்பட்டது. மாவட்டத்தலைவர் கே.ஆர்.வைத் தியநாதன், மாநில ஆலோசகர் பட்டாபிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.